Home உலகம் சிரியா நாட்டு அகதிகளே வருக! மனமிரங்கினார் பிரிட்டன் பிரதமர்!

சிரியா நாட்டு அகதிகளே வருக! மனமிரங்கினார் பிரிட்டன் பிரதமர்!

553
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_42957270146பிரிட்டன் – ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், உள்நாட்டில் ஓய்வின்றி நடந்துவரும் போரால் உடைமைகளை எல்லாம் இழந்து உயிர் பிழைத்து வழ்ந்தால் போதுமென்று சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கள்ளப் படகு ஏறி கடல் மார்க்கமாக ஐரோப்பாவுக்குப் புகலிடம் தேடிச் செல்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி படகு கவிழ்ந்து, உயிர் பிழைக்க ஓடியவர்கள் கடலில் மூழ்கி உயிரை இழக்கும் அவலம் நேரிடுகிறது.

எலிக்குப் பயந்து புலியிடம் சிக்கிக் கொண்ட கதையாகி விடுகிறது அவர்களின் நிலைமை.

#TamilSchoolmychoice

அப்படிச் சமீபகாலமாகக் கடலில் மூழ்கி இறந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

அந்த அகதிகள் அவலம் இதுவரை அவ்வளவாய் வெளி உலகிற்குப் புலனாகாமல் இருந்தது.

நேற்று முன்தினம் கரை ஒதுங்கிக் கிடந்த ஒரு சிரியா அகதிக் குழந்தையின் மரணம் உலகையே உலுக்கி, அகதிகளின் ஆறாத் துயரத்தைப் புரிய வைத்திருக்கிறது.

இதுநாள் வரை மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வரும் அகதிகளை ஜெர்மனி பெருமளவில் ஏற்று வந்தது. ஆனால் பிரிட்டன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தன.

குறிப்பாகப் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ‘அகதிகளை வரவேற்பதால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது’ என்று கூறியிருந்தார்.

சிரியா குழந்தையின் மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மனம் மாறி,,“நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து மக்களின் துயரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான சிரியா நாட்டு அகதிகளை வரவேற்க முடிவெடுத்துள்ளோம். இன்னும் அதிகமாகக் கூட நாங்கள் செய்வோம். ஏற்கெனவே உள்ள திட்டங்களின் படி ஆயிரம் அகதிகளை முதற்கட்டமாக வரவேற்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

அதுபோல் மற்ற நாடுகளும் கூடிய விரைவில் அகதிகளுக்குக் கை கொடுக்கும் என நம்புவோம்.