லண்டன் – ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரையும் இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத்தையும் கொலை செய்யச் சதித்தீட்டம் தீட்டியிருந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய ரக்காஹ் பகுதியில் கடந்த மாதம் 21-ஆம் தேதி வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது பிரிட்டனின் ராயல் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் ரியாத் கான், ருகுல் ஆமின் மற்றும் இன்னும் ஓர்அடையாளம் தெரியாத தீவிரவாதி ஆகிய மூவரும் பலியானார்கள்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரியாத் கான், ருகுல் ஆமின் ஆகிய இருவரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட வர்கள் ஆவர்.
பிரிட்டனின் தாக்குதலில் பலியான இந்தத் தீவிரவாதிகள் மூவரும் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரையும் இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத்தையும் கொலை செய்ய சதிதீட்டம் தீட்டியிருந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது.
வரும் 15-ஆம் தேதி ஜப்பானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 70-ஆவது ஆண்டு நினைவு தின விழா இங்கிலாந்தின் வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது.
இதில் இளவரசர் சார்லஸ் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவின் போது வெடி குண்டுத் தாக்குதல் நடத்தி இங்கிலாந்து அரச குடும்பத்தினரை அவர்கள் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
எதிர்பாராமல் அவர்கள் பிரிட்டனின் தாக்குதலில் கொல்லப்பட்டதால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.