Home இந்தியா புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்:1 லட்சம் பக்தர்கள் வெளியேற்றம்!

புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்:1 லட்சம் பக்தர்கள் வெளியேற்றம்!

586
0
SHARE
Ad

21-1442823038-ajmer-dargahஅஜ்மீர்- இந்தியாவில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை 6.40 மணியளவில் ஒரு மர்ம நபர் தொலைபேசி மூலம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பிரபல க்வாஜா கரீப் நவாஸ் தர்காவில் குண்டு வெடிக்கும் என்று காவல் நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்துக் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் தர்காவுக்கு விரைந்து சென்று, அங்கு கூடியிருந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

#TamilSchoolmychoice

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தர்கா வளாகம் முழுவதும் ஓர் இடமும் பாக்கியில்லாமல் தேடியும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. கவனிக்கப்படாத பை ஒன்று மட்டுமே கிடைத்தது. அதை பரிசோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.இதன்மூலம், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.