Home Featured நாடு துணை அமைச்சர் கமலநாதனும் உதவித் தலைவர் போட்டியில் குதிக்கிறார்!

துணை அமைச்சர் கமலநாதனும் உதவித் தலைவர் போட்டியில் குதிக்கிறார்!

499
0
SHARE
Ad

P-Kamalanathanகோலாலம்பூர் – மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் கல்வி அமைச்சின் துணை அமைச்சரான பி.கமலநாதனும் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என மஇகா தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013 கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலநாதன், இந்த முறை உதவித் தலைவர் பதவிக்காக பல புதியவர்கள் போட்டியில் குதிப்பதால், தனக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

துணை அமைச்சராகத் தான் ஆற்றியுள்ள பணிகள் காரணத்தினாலும், இதுவரை கட்சியில் தான் காட்டியுள்ள விசுவாசம், தேசியத் தலைவர்களுக்கு வழங்கியுள்ள ஆதரவு ஆகிய அம்சங்களின் அடிப்படையிலும் அவர் இந்த முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice