Home Featured நாடு அருள் கந்தா விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: டோனி புவா

அருள் கந்தா விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: டோனி புவா

730
0
SHARE
Ad

Arul-Kanda-Tony-Puaகோலாலம்பூர்- 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமியுடன் நேரடியாக விவாதம் செய்ய வாய்ப்பு கிடைத்தது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எந்தவித நிபந்தனையும் இன்றி நேரடி விவாதத்துக்கு அருள் கந்தா இசைவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக அவர் கூறியுள்ளார்.

“கண்ணியத்துடன் அவர் எனது அழைப்பை ஏற்றதற்கு நன்றி. அடுத்த வாரத்தில் இருதரப்பு பிரதிநிதிகளும் நேரில் சந்தித்து, விவாதத்தை எப்போது, எப்படி நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். அருள் கந்தாவுடனான முதல் சந்திப்பையும், மலேசியர்கள் நீண்ட காலமாக அவரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்கும் தருணத்தையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்றார் டோனி புவா.

இந்த நேரடி விவாதத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முன்வந்த தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சாலேவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டோனி புவா கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, 1எம்டிபி குறித்து தம்முடன் நேரடியாக விவாதிக்க அருள் கந்தா தயாரா? என டோனி புவா சவால் விடுத்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட அருள் கந்தா, விவாதத்தில் பங்கேற்பதற்கு முன்னர் டோனி புவா, பொதுக்கணக்குக் குழுவிலிருந்து விலக வேண்டுமென நிபந்தனை வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இது கேலிக்கூத்தான நிபந்தனை என டோனி புவா விமர்சித்திருந்ததையடுத்து, நிபந்தனையைத் திரும்பப் பெறுவதாக அருள் கந்தா அறிவித்துள்ளார்.