Home Featured நாடு 1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிடத் தயார் – டோனி புவா

1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிடத் தயார் – டோனி புவா

665
0
SHARE
Ad

Arul-Kanda-Tony-Puaகோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார்.

அருள் கந்தாவுடனான நேரடி விவாதத்தை விட, பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையே முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டோனி புவா, அந்த விவாதம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் விதித்துள்ள விதிமுறைகள் குறித்து புதன்கிழமை அவரிடம் விவரங்கள் கேட்கப் போவதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

“1எம்டிபி குறித்த பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்கு, நேரடி விவாதத்தால் குந்தகம் ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன். பொதுக் கணக்குக் குழு உறுப்பினர், பொறுப்புள்ள நாடாளுன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

“பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் என்ற வகையில் எனக்குத் தெரிய வந்துள்ள விவரங்களை நேரடி விவாதத்தின்போது பயன்படுத்துவேன் எனக் கூறுவது சரியல்ல. அவ்வாறு செய்தால், நான் வகிக்கும் பொறுப்பை தவறாகப் பயன்படுத்தியதாகிவிடும்.

“ஏற்கெனவே பொதுமக்களுக்குத் தெரிந்துள்ள தகவல்களை மட்டுமே பயன்படுத்துவேன். அறிக்கைகள் வழி என்னால் பல கேள்விகளைக் கேட்க முடியுமெனில், அவற்றை நேரடியாக ஏன் கேட்க முடியாது?” என்று டோனி புவா மேலும் கூறினார்.