Home Featured உலகம் இரு பிரதமர்களை உபசரித்து வரலாற்றில் இடம் பிடித்தது கோமள விலாஸ்!

இரு பிரதமர்களை உபசரித்து வரலாற்றில் இடம் பிடித்தது கோமள விலாஸ்!

955
0
SHARE
Ad

சிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூர் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற சைவ உணவுக் கடையான கோமள விலாஸ் உணவகத்தில் விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.

Modi-Lee Hsien Loong-Selfie-Singapore

சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங்கும், அவரது மனைவியும், மோடியுடன் அமர்ந்து அக்கடையிலேயே இரவு உணவு அருந்தினர்.

#TamilSchoolmychoice

கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் கோமதி, இரு பிரதமர்கள் தமது கடையில் உணவு சுவைப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

வடை, இட்லி, மசாலா தோசை, வெங்காய மசாலா தோசை உள்ளிட்ட உணவுகள் அவர்களுக்குப் பரிமாறப்பட்டுள்ளன.

Komala vilas

நேற்று, இரு முக்கியமான தலைவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் வந்தவுடன், கீழ்த்தளத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் மேல் தளத்திற்கு அனுப்பிவிட்டு, கீழ்த்தளத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இது குறித்து ‘த நியூ பேப்பர்’ பத்திரிக்கைக்கு, கோமள விலாஸ் நிர்வாகி ராஜ்குமார் குணசேகரன் கூறுகையில், “எல்லாம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. அதன் படி எல்லாம் நல்லபடியாக நிறைவு பெற்றது” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

சிங்கையில் இந்தியர்கள் மட்டுமல்ல சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் கோமள விலாஸ் மிகவும் பரிச்சயமான உணவுக்கடை.

அதன் தரமும், ருசியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பதால் எப்போதும் அக்கடை வாடிக்கையாளர்களால் நிறைந்திருக்கும்.

இப்போது, இரு பிரதமர்களுக்கு விருந்து படைத்து வரலாற்று சிறப்புமிக்க கடையாகவும் கோமள விலாஸ் புகழ்பெற்றுள்ளது.

படங்கள்: நரேந்திர மோடி டுவிட்டர்