Home Featured நாடு நஜிப் கோட்டையில் மகாதீர் சிங்கம்! அம்னோ பேரவைக்கு வந்தார் மகாதீர்!

நஜிப் கோட்டையில் மகாதீர் சிங்கம்! அம்னோ பேரவைக்கு வந்தார் மகாதீர்!

552
0
SHARE
Ad

Najib-UMNO Assembly invitationகோலாலம்பூர்: மிகுந்த பரபரப்புடன் இன்று காலை தொடங்கியுள்ள அம்னோ பொதுப் பேரவை கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின்  தலைமையுரையோடு தொடங்குகின்றது.

நஜிப்பின் கோட்டையாகத் திகழும் அம்னோவில், அந்தக் கோட்டையிலேயே உன்னைத் துணிச்சலுடன் சந்திக்கின்றேன் என்பது போல, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் வருகை தந்துள்ளார்.

நஜிப் பதவி விலக வேண்டும் என்றும், 1எம்டிபி விவகாரங்கள் குறித்தும், 2.6 பில்லியன் நன்கொடை குறித்தும் பகிரங்கமாக நஜிப்புக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வரும் மகாதீர், நஜிப் பதவி விலகிச் செல்ல வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலையில் அவர் அம்னோ பேரவையில் கலந்து கொண்டிருப்பது இந்தப் பேரவையின் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் மேலும் கூட்டியுள்ளது.