கோலாலம்பூர் – தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அடுத்த வாரம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “சீனாவில் இருந்து வரும் குளிர்ச்சியான காற்றின் காரணமாக உயர் காற்றழுத்தம் ஏற்பட்டு அடுத்த வாரம் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு கனமழை பெய்யும். சபா, சரவாக் மற்றும் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்த வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
“சபா, சரவாக்கில் ஒருநாளில் 100 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யும் என்றும், கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் 50 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யும்” என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.