Home Featured நாடு 100 வயது காண்டாமிருகத்தின் கொம்பு திருட்டு – ஜோகூர் வனவிலங்குத் துறை இயக்குநர் கைது!

100 வயது காண்டாமிருகத்தின் கொம்பு திருட்டு – ஜோகூர் வனவிலங்குத் துறை இயக்குநர் கைது!

622
0
SHARE
Ad

Rhino-Hornஜோகூர் பாரு – ஜோகூர் அரச அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான காண்டாமிருகத்தின் கொம்பினைத் திருடிய குற்றத்திற்காக ஜோகூர் வனவிலங்குத் துறையின் இயக்குநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ வான் அகமட் நாஜ்முடின் மொகமட் கூறுகையில், நேற்று டிசம்பர் 25-ம் தேதி, ஜோகூர் பாரு செண்ட்ரல் காவல்நிலையத்தில், இரவு 9.40 மணியளவில் அந்நபர் தானாக வந்து சரணடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 21-ம் தேதி, புக்கிட் திம்பலானில் உள்ள அருங்காட்சியக அலுவலகத்தில், வெயிலில் காயவைக்கப்பட்டிருந்த அந்த 100 வயது காண்டாமிருகத்தின் கொம்பினை, ஜோகூர் சுற்றுலாத்துறை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த 46 வயதான அந்நபர் திருடியுள்ளார்.

#TamilSchoolmychoice

அது அங்கிருந்த ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது என்று வான் அகமட் நாஜ்முடின் மொகமட்  தெரிவித்துள்ளார்.