Home Featured நாடு “இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!

“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!

959
0
SHARE
Ad

Indira Gandhi newகோலாலம்பூர் – இரண்டு பிள்ளைகளின் மதமாற்ற விவகாரத்தில், பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, இந்நாட்டில் இனம், மதம் கடந்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

“இன்று இருக்கும் நமது சட்ட நடைமுறைகளின் காரணமாக அந்தத் தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்”

Saravanan - MIC -“இது ஒரு இந்து தாய் மற்றும் இஸ்லாம் தந்தைக்கும் இடையே நடந்த விவகாரம் என்று எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்”

#TamilSchoolmychoice

“இது எந்த இனத்திலும் நடக்கலாம்… எந்த மதத்திலும் நடக்கலாம்” என்று சரவணன் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும், நீதித்துறையும், தங்களது கண்களைத் திறந்து இனம், மதம் கடந்து அனைவரையும் பார்க்க வேண்டும், இந்திராவின் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்றும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.