Home வாழ் நலம் உடலை அழகாக்கும் வழிமுறைகள்

உடலை அழகாக்கும் வழிமுறைகள்

649
0
SHARE
Ad

fruits-n-vegeகோலாலம்பூர், மார்ச்.15- உடலைக்  கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, கொழுப்பைக் குறைக்கிறோம் என்ற பெயரில் பட்டினி கிடக்கிறார்கள்.

இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் கிடைக்காமல் கன்னங்கள் குழி விழுந்து பார்பதற்கு எலும்பும், தோலுமாகக் காட்சியளிக்கிறார்கள். இன்றைய உலகமும் அவ்வாறு உடல் இளைத்துக் காணப்படுவதை  நாகரீகம் என்று கருதி அதை ஏற்றுக்கொள்கிறது என்பது தான் கசப்பான உண்மை.

மிக எளிய முறையில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்குமாறு உணவுத் திட்டத்தை அமைத்து,அதன் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம்.

#TamilSchoolmychoice

ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு முறையை பின்பற்ற சில வழிவகைகள்:- 

தினமும் ஏதாவது ஒரு பழ சாறு குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ சாறு அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் பனிக்கட்டி சேர்க்காமல் குடிக்க வேண்டும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

எண்ணெய் அதிகம் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.  வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.  உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

மாலை வேளையில் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து வேக வைத்த தானிய வகைகளான சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.  அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.  புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதற்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம்.

இவ்வாறாகத் தொடர்ந்து செய்து வந்தால், உடலை கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்திருக்கலாம்.