Home Featured தமிழ் நாடு தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் திட்டவட்ட அறிவிப்பு!

தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் திட்டவட்ட அறிவிப்பு!

619
0
SHARE
Ad

vijayakanth00சென்னை – வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என நேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதன் மூலம் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என இத்தனை நாட்களாக நிலவி வந்த ஆரூடங்களும், எதிர்பார்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன.

நேற்று சென்னை ராயப்பேட்டியில் தேமுதிக மகளிரணி கூட்டம் நடைபெற்றது. அதில், தான் யாரிடமும் பேரம் பேசவில்லை என்றும், தேமுதிக தனியாகத் தான் தேர்தலைச் சந்திக்கப் போகிறது என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், கூட்டணிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அனைத்து கட்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட விஜயகாந்த், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.