Home Featured உலகம் எம்எச் 370 – தென் ஆப்பிரிக்க மாணவன் கண்டெடுத்த உடைந்த பாகம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகின்றது

எம்எச் 370 – தென் ஆப்பிரிக்க மாணவன் கண்டெடுத்த உடைந்த பாகம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகின்றது

830
0
SHARE
Ad

கான்பெரா – மொசாம்பிக் நாட்டின் கடற்கரையோரத்தில் தென் ஆப்பிரிக்க மாணவன் ஒருவன் கண்டெடுத்த எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் என நம்பப்படும் பொருள் ஆஸ்திரேலியாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றது.

South Africa Flight MH370தான் கண்டெடுத்த உடைந்த பாகத்துடன் தென் ஆப்பிரிக்க மாணவன் லியாம் லோட்டர்…

வான்வெளியில் மாயமாகிப் போன எம்எச் 370 விமானத்தை, பல நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காத சூழ்நிலையில், அண்மைய சில நாட்களாக அடுத்தடுத்து அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் மொசாம்பிக் கடற்கரையோரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டிருப்பது பல கேள்விகளையும் சுவாரசியங்களையும் எழுப்பியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

முதன் முதலில் அந்த விமானத்தின் பாகம் ரீயூனியன் தீவில் கிடைத்தது. பிறகு இரண்டாவது பாகம் மொசாம்பிக் கடற்கரையோரமாகக் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களில், தென் ஆப்பிரிக்க மாணவன் ஒருவன் குடும்பத்தினருடன் மொசாம்பிக் கடற்கரையோரத்தில் சுற்றுலா போயிருந்தபோது, விமானத்தின் உடைந்த பாகத்தைக் கண்டெடுத்து தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதியே உடைந்த பாகத்தைக் கண்டெடுத்த லியாம் என்ற அந்த மாணவன், இதுநாள் வரை அந்த உடைந்த பாகத்தை வீட்டில் வைத்திருக்கின்றான். மொசாம்பிக்கில் ஒரு பாகம் கிடைத்த செய்தியைப் பார்த்ததும்தான், தான் வைத்திருப்பதும், அந்த விமானத்தின் பாகங்களுள் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகித்து, ஆஸ்திரேலியா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து அந்த பாகம் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து இலாகாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.