சென்னை – பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரஷாந்த் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த திடீர் மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், அவரின் இந்தத் தற்கொலை முடிவிற்கான காரணங்கள் இதுவரை வெளியாக வில்லை.