அப்போது, கிராமப்புற மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி என்று சொன்னால் புரியாது. அதனால், மக்கள் நலக் கூட்டணிக்கு பெயர் விஜயகாந்த் அணிதான். தே.மு.தி.க.வை உடைக்கும் கனவு ஒருபோதும் பலிக்காது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் விவரம் விரைவில் வெளியிடப்படும்.
கூட்டணி சேர பேரம் பேசியதாக வெளியான தகவல்களை பெரிதுபடுத்த வேண்டாம். வைகோ சொன்னதுபோல் தே.மு.தி.க. பணம் குறித்தோ, சீட்டுகள் குறித்தோ தி.மு.க.விடம் பேரம் பேசவில்லை. கலைஞர், ஸ்டாலின் எங்களை கூட்டணிக்கு அழைத்தது உண்மைதான். ஆனால் அவர்களிடம் நாங்கள் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்றார்.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தி.மு.க. தருவதற்கு முன்வந்தது என்ற செய்தி ஒரு நாளிழில் வெளிவந்துள்ளது. அது உண்மையுமாகும்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.