Home Featured நாடு ஏப்ரல் 11-ம் தேதி சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படும் – அட்னான் அறிவிப்பு!

ஏப்ரல் 11-ம் தேதி சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படும் – அட்னான் அறிவிப்பு!

532
0
SHARE
Ad
Adenan satem 440x215கூச்சிங் – 11-வது மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 11-ம் தேதி, சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என அம்மாநில முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம் இன்று அறிவித்தார்.
இது குறித்து முடிவெடுப்பதற்காக இன்று மாநில ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட்டைச் சந்தித்த அட்னான் அவரின் அனுமதியோடு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
“இன்று காலை, நான் ஆளுநர் துன் அப்துல் தாயிப் மாஹ்முட்டைச் சந்தித்து சட்டமன்றம் கலைப்பது குறித்து அனுமதி கேட்டேன். வரும் ஏப்ரல் 11-ம் தேதி சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநர் அனுமதியளித்துவிட்டார்.” என்று விஸ்மா பாபா மலேசியாவில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அட்னான் அறிவித்துள்ளார்.