Home Featured தமிழ் நாடு மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ்!

மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ்!

680
0
SHARE
Ad

சென்னை – ஜி.கே.வாசனின் தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) மக்கள் நலக் கூட்டணி – விஜயகாந்த் இணைந்த கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது.

இந்திய நேரம் 4.30 மணியளவில் தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெளியிட்ட தகவல்களின்படி, கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகம் நோக்கி, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

Vaiko-vasan-thirumaசில வாரங்களுக்கு முன்னால் வாசனுடன் வைகோ, திருமா கூட்டணி குறித்த சந்திப்பு நடத்தியபோது…

#TamilSchoolmychoice

விரைவில் வாசன் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தனை கட்சிகள் – வலுவான மக்கள் ஆதரவுள்ள தலைவர்கள் – திமுக, அதிமுகவுக்கு எதிராக ஒன்றிணைவது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது.

தமாகா வட்டாரத்திலும் கட்சித் தொண்டர்களிடையே இந்தக் கூட்டணி இணைப்புக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.