Home Featured தமிழ் நாடு மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு 26 தொகுதிகள்! மற்ற கட்சிகளுக்கு எத்தனை?

மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு 26 தொகுதிகள்! மற்ற கட்சிகளுக்கு எத்தனை?

754
0
SHARE
Ad

சென்னை – இன்று மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) இணைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த தேமுதிக தனது ஒதுக்கீட்டில் 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து, 104 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகின்றது.

Makkal nala kootani-GK Vasanஇன்று சனிக்கிழமை விஜயகாந்தின் தேமுதிக அலுவலகம் வந்த ஜிகே.வாசன் மற்ற மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தொகுதி உடன்பாடு கண்டபோது…

#TamilSchoolmychoice

வைகோவின் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணிக்கு முன்பு 110 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை 6 தொகுதிகளை தமாகாவுக்கு ஆதரவாக விட்டுக் கொடுத்து தற்போது 104 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றன.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:

தேமுதிக – 104 தொகுதிகள்

மதிமுக – 29 தொகுதிகள்

தமாகா – 26 தொகுதிகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 25 தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 25 தொகுதிகள்

இ.கம்யூனிஸ்டு – 25 தொகுதிகள்

மொத்தம் = 234 தொகுதிகள்