Home Featured நாடு ஜாகிர் நாயக் சர்ச்சையால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி கூட்டணியில் பிளவு!

ஜாகிர் நாயக் சர்ச்சையால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி கூட்டணியில் பிளவு!

1009
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – இஸ்லாம் பண்டிதர் ஜாகிர் நாயக் சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதன் விளைவு, தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளில் பிளவு ஏற்படும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில், ஜாகிரின் சொற்பொழிவை இரத்து செய்த காரணத்திற்காக அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மஇகா சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அதேவேளையில், அம்னோ இளைஞர் பிரிவோ அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று காலிட்டுக்கு கோரிக்கை விடுத்ததோடு, மஇகாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, எதிர்கட்சிகளைப் பொறுத்தவரையில், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி நேற்று வெளியிட்ட பேஸ்புக் பதிவு ஒன்றில், இஸ்லாம் பண்டிதரை ‘சாத்தான்’ என்று வர்ணித்தார். பின்னர் அப்பதிவை நீக்கினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஜசெக-வுடன் ஒரே கூட்டணியில் உள்ள அமனா கட்சியோ, இஸ்லாம் பண்டிதர் ஜாகிர் நாயிக் சொற்பொழிவு தடை செய்யப்பட்டதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல், பாஸ் மற்றும் இக்காத்தான் முஸ்லிமின் மலேசியா கட்சியும் காவல்துறையின் முடிவிற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக மலேசியாகினி வெளியிட்ட செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.