Home Featured நாடு சில கட்டுப்பாடுகளுடன் கோலாலம்பூர் நிகழ்ச்சியில் பேச ஜாகிருக்கு அனுமதி!

சில கட்டுப்பாடுகளுடன் கோலாலம்பூர் நிகழ்ச்சியில் பேச ஜாகிருக்கு அனுமதி!

745
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – வரும் ஏப்ரல் 16-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ள சொற்பொழிவில் பேச, இஸ்லாம் பண்டிதர் ஜாகிர் நாயக்கிற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.

எனினும், மலாக்காவில் நடைபெறவிருந்த ‘இஸ்லாம் மற்றும் இந்து சமயத்திற்கிடையிலான ஒற்றுமைகள்’ என்ற தலைப்பிலான சொற்பொழிவுக்கு விதித்த தடையை, மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில், ‘குரான் என்பது கடவுளின் வார்த்தையா’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தச் சொற்பொழிவில் பேசவுள்ள ஜாகிர் நாயக்கிற்கு, இஸ்லாம் அல்லாதவர்களின் சமயங்களைப் பற்றி பேசக் கூடாது என்றும், இஸ்லாம் பற்றிய கருத்துகள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக காலிட், மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமின் மகத்துவம் பற்றி ஜாகிர் பேச வேண்டும் என்றால், தாராளமாக அவர் பேசலாம். ஆனால் அந்தப் பேச்சாளரோ அல்லது மற்றவர்களோ, அந்நிகழ்ச்சியை மற்ற மதங்களை இழிவு படுத்தும் ஒரு மேடையாகப் பயன்படுத்தக்கூடாது”

“அப்படி நடந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். நமது நாடு பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களால் நிறைந்துள்ளது” என்று காலிட் தெரிவித்துள்ளார்.