Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் சடலம் உடைந்த பாகத்தோடு சிக்கியிருக்கலாம்!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் சடலம் உடைந்த பாகத்தோடு சிக்கியிருக்கலாம்!

1098
0
SHARE
Ad

கூச்சிங் – விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த அறுவரில் ஐந்து பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்னும் அந்த ஹெலிகாப்டரின் விமானி, கேப்டன் ருடோல்ப் ரெக்ஸ் ராகாஸ் என்பவரின் நிலைமை மட்டும் என்னவானது என்பது தெரியவில்லை.

அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படும் வேளையில், அவரது சடலம் ஹெலிகாப்டரின் விமானி அறைப் பகுதியில்  சிக்கிக் கொண்டிருக்கலாம் என மீட்புக் குழுவினர் கருதுகின்றனர்.

Eurocopter-helicopter-model of sarawak crashedவிபத்துக்குள்ளான இரோகோப்டர் ஹெலிகாப்டரின் மாதிரி ஒன்று…

#TamilSchoolmychoice

பொதுவாக, ஹெலிகாப்டரில் விமானிகள் பறக்கும் வேளையில் தங்களின் இருக்கையோடு, பட்டையணிந்து இறுகக் கட்டியிருப்பர் என்பதால், உடைந்த விமானி அறை பாகங்களோடு விமானியின் உடல் சிக்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அதனால்தான் அவரது உடலைக் கண்டெடுப்பதில் தாமதம் ஏற்படுகின்றது எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது 505 பேர்களைக் கொண்டுள்ள மீட்புக் குழுவின் பலம், இரண்டு மடங்காக, 1010 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக, சரவாக் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சப்து ஒஸ்மான் அறிவித்துள்ளார்.

தேடுதல் பணிகள் தொடரும் என்றும் மீட்புப் போராட்டம் நிறுத்தப்படும் அறிகுறிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.