கோலாலம்பூர் – தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில், கோர் மிங்கிற்கு முறையான தற்காப்பு வாதங்கள் இல்லையென்பதால், ஆவணங்களை வைத்து உடனடித் தீர்ப்பு வழங்குபடி (Summary Judgement), பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் விடுத்திருந்த கோரிக்கையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
நஜிப் மற்றும் ரோஸ்மாவின் வழக்கறிஞர் மொகமட் ஹாபாரிசான் ஹாருனின் உடனடித் தீர்ப்பு வழங்கக் கோரும் விண்ணப்பம் 14ஏ-வை நீதிபதி சித்தி காடிஜா சையத் ஹசான் பாத்ஜெனித் நிராகரித்தார்.
நஜிப்புக்குப் பதிலாக நாடாளுமன்ற அவைக் கூட்டத்தை ரோஸ்மா நடத்தியதாக தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த கருத்திற்காக இந்த அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.