புதுடெல்லி – பாலக்காடு, திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி பாலக்காடு (கேரளா), திருப்பதி (ஆந்திரா), தார்வார் (கர்நாடகா), பிலாய் (சத்தீஸ்கர்), கோவா மற்றும் ஜம்மு ஆகிய 6 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தான்பாத் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்எம் எனப்படும் இந்திய சுரங்கக் கல்வியியல் மையத்தையும், ஐஐடி-ஆக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.