Home Featured கலையுலகம் ஏர் ஆசியாவின் புதிய அறிவிப்பு – சென்னையில் ‘கபாலி’ திரைப்படத்தைக் காண அரிய வாய்ப்பு!

ஏர் ஆசியாவின் புதிய அறிவிப்பு – சென்னையில் ‘கபாலி’ திரைப்படத்தைக் காண அரிய வாய்ப்பு!

550
0
SHARE
Ad

kabali-teaser-dialogueகோலாலம்பூர் – ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், மலேசிய ரசிகர்களுக்காக கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளைச் செய்துள்ளது.

அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு, மலேசியாவில் இருந்து இருவரைத் தேர்வு செய்து இலவசமாக சென்னைக்கு அழைத்துச் செல்லவுள்ளது.

மலேசியாவில் தங்கியிருக்கும் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இப்போட்டியில் கலந்து கொள்ள மலேசிய ரசிகர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப் பிரபலமான திரைப்படங்களில் வரும் காட்சிகளில் ஏதாவது ஒன்றை வைத்து அவரைப் போலவே நடித்து அதைப் படம் பிடித்து இண்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

காணொளிகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 27-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் ஆசியா பெர்ஹாட்டின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஸ்பென்செர் லீ நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வெற்றி பெற்றவர்களை எங்களோடு அழைத்துக் கொண்டு சென்னை சென்று, அங்கு நடைபெறும் சிறப்புக் காட்சியில் கலந்து கொள்ள வைப்போம். வாழ்நாளில் அது போன்ற அனுபவம் ஒருமுறை தான் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு சென்னைக்குச் செல்லும் இரண்டு விமான டிக்கெட்டுகள், இரண்டு இரவுகள், மூன்று நாட்கள் தங்குவதற்கான வசதி மற்றும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஆகியவை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.