Home Featured உலகம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!

1028
0
SHARE
Ad

இலண்டன் – பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இன்று உறுதியானது. 52 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48 சதவீத மக்கள் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்ததைத் தொடர்ந்து, இக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் முதல் நாடானது பிரிட்டன்.

Britain and EU reach reform dealவாக்கெடுப்பு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து 52% மக்களும், அதில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து 48% மக்களும் வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று நடந்த பொது வாக்கெடுப்பில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன.

#TamilSchoolmychoice

கேமரூன் ராஜினாமா:

மக்கள் தீர்ப்பின் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் பதவியை டேவிட் கேமரூன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார்.