அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார அளவு கோலாகவும் பார்க்கப்படும் அமெரிக்க பங்கு சந்தை நேற்று 500 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது.
பின்னர் நேற்று, அமெரிக்க பங்கு சந்தை வணிகம் நிறைவடைந்த போது 610 புள்ளிகள் குறைந்து, முடிவடைந்தது.
உலகின் மற்ற நாடுகள் பல வற்றிலும் பங்குச் சந்தைகள் சரிந்ததோடு, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் நாணய மதிப்பும் பெருமளவில் சரிந்தது.
Comments