Home Featured உலகம் ஆர்க்கிட்டுக்கு ஒபாமா தம்பதியின் பெயர் சூட்டியது சிங்கப்பூர்!

ஆர்க்கிட்டுக்கு ஒபாமா தம்பதியின் பெயர் சூட்டியது சிங்கப்பூர்!

761
0
SHARE
Ad

Obamaவாஷிங்டன் – அதிகாரப்பூர்வப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோருக்கு, வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமா ஆகியோர் அரச விருந்து அளித்து உபசரிப்பு செய்தனர்.

அமெரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான 50 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் விதமாக நேற்று செவ்வாய்கிழமை இரவு (மலேசிய நேரப்படி புதன்கிழமை காலை) இந்நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய லீ சியான் லூங், அதிபர் ஒபாமையும், அவரது மனைவி மிச்சல் ஒபாமாவையும் கௌரவிக்கும் நோக்கில், புதிய ஆர்க்கிட் ஹைபிரிட் மலர்களுக்கு அவர்களது பெயரையே சூட்டுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

3-aug-obama-orchid-1அந்த ஆர்க்கிட் மலர்கள் சிங்கப்பூருக்கும், ஒபாமா பிறந்த ஹாவாய்க்கும் இடையே உருவாக்கப்பட்டது என்றும், அம்மலர்கள் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பிரதிபலிக்கிறது என்றும் லீ சியான் லூங் தெரிவித்தார்.