இது குறித்து இன்று புதன்கிழமை, ஏர் ஆசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோலாலம்பூரில் இருந்து இந்தோனிசியாவின் பண்டா ஆச்சே நோக்கிச் சென்ற ஏகே423 விமானம் பாதுகாப்பு சோதனைக்காக தரையிறக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு, விமானத்தில் பாதுகாப்புச் சோதனைகளை நடத்திய அதிகாரிகள், விமானம் தொடர்ந்து இயங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், விமானத்தில் இருந்த சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Comments