Home Featured இந்தியா இந்தியாவில் ஜிஎஸ்டி வரி சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

843
0
SHARE
Ad

arun-jaitleyபுதுடில்லி – நீண்ட காலமாக அரசியல் சர்ச்சைகளின் காரணமாக இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) முடங்கிக் கிடந்த ஜிஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி நேற்று கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், ஆட்சேபம் தெரிவித்து அதிமுக மேலவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) சமர்ப்பித்த இந்த பொருள் சேவை வரி மசோதா மீதான விவாதங்களில், புதிதாக மேலவை உறுப்பினராகியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டு தனது கருத்துகளை வழங்கினார்.

#TamilSchoolmychoice

பொருள்சேவை வரி அறிமுகத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதார அமைப்புகளிலும், வணிகங்களிலும், மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவிலும் இது போன்ற பொருள்சேவை வரி சட்டம் அமுலில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.