Home Featured உலகம் இலண்டனில் கத்திக் குத்து பயங்கரவாதம்! ஒரு பெண் மரணம்! ஐவர் காயம்!

இலண்டனில் கத்திக் குத்து பயங்கரவாதம்! ஒரு பெண் மரணம்! ஐவர் காயம்!

703
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

இலண்டன் – மத்திய இலண்டனிலுள்ள ரசல் ஸ்குவேர் என்ற இடத்தில் நேற்றிரவு உள்நாட்டு நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த ஒரு பயங்கரவாத கத்திக் குத்துத் தாக்குதலில் ஒரு பெண்மணி உயிரிழந்தார். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து, பதில் நடவடிக்கையில் இறங்கிய இலண்டன் காவல் துறையினர் மின்அதிர்ச்சி பாய்ச்சும் துப்பாக்கியைப் பயன்படுத்தித் தாக்குதல்காரனை வீழ்த்தி, அவனைக் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஸ்காட்லாண்ட் யார்ட் காவல் துறையினர் நடந்த சம்பவத்தை பயங்கரவாத சம்பவம் என வகைப்படுத்தியுள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)