Home Featured இந்தியா இந்தியாவுக்கு தங்கத்தை வென்று தருவாரா சிந்து?

இந்தியாவுக்கு தங்கத்தை வென்று தருவாரா சிந்து?

1327
0
SHARE
Ad

sindhu-pv-india-badminton

ரியோ டி ஜெனிரோ – இன்று வெள்ளிக்கிழமை இரவு (மலேசிய நேரம்) 9.30 மணியளவில் இந்தியத் துணைக் கண்டமே, ஒன்று திரண்டு, முதன் முறையாக கிரிக்கெட் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு, பூப்பந்து என்ற பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டியொன்றைக் காணவிருக்கின்றது.

காரணம், கடுமையான போராட்ட குணத்தோடு, ஒலிம்பிக்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதியாட்டம் வரை வந்துள்ள சிந்து என்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகியுள்ள இளம் பெண், இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்புதான்!

#TamilSchoolmychoice

சிந்து மோதவிருப்பது உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கரோலினா என்ற ஸ்பெயின் நாட்டு வீராங்கனையுடன். சிந்துவோ தற்போது உலகத் தர வரிசையில் இருப்பது 10-வது இடத்தில்!

ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் இன்று பூப்பந்து என்ற விளையாட்டின் மீதும், அதில் சிறப்பாக விளையாடி வரும் சிந்து மீதும் பதிந்திருக்கின்றது. பூப்பந்து என்றால் சாய்னா நேவால்தான் என்ற நிலைமை மாறி, அவர் தடம் பதித்து விட்டுச் சென்றிருக்கும் இடத்தைப் பிடித்து விட்டார் சிந்து.

இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து பூப்பந்து விளையாட்டு மீது, இந்தியர்களின் மோகம் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.