Home Featured இந்தியா ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – பி.வி.சிந்து தோல்வி! கரோலினா வெற்றி!

ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – பி.வி.சிந்து தோல்வி! கரோலினா வெற்றி!

682
0
SHARE
Ad

olympics-badminton-carolina marin-ரியோ டி ஜெனிரோ – (கூடுதல் தகவல்களுடன்) முதல் செட் ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் ஆட்டக்காரர் கரோலினா மரின்’னை 21-19 புள்ளிக் கணக்கில் தோற்கடித்த சிந்து, கரோலினாவின் கடும் போராட்டத்தினால் இரண்டாவது ஆட்டத்தில் 12-21 புள்ளிகளில் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது செட் ஆட்டத்தில் கடுமையானப் போராட்டம் நடத்திய சிந்து 21-15 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஏறத்தாழ 1 மணி நேரம் 23 நிமிடங்கள் இருவருக்கும் இடையிலான போராட்டம் நீடித்தது.

கரோலினா-சிந்து ஆட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தின் வழி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துகள். மிகச் சிறப்பான முறையில் போராட்டம் நடத்தினீர்கள். ரியோ 2016 ஒலிம்பிக்சில் நீங்கள் நிகழ்த்திய சாதனை வரலாற்றுபூர்வமானது. அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு அனைவராலும் நினைவில் கொள்ளப்படும்” என மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.