Home Featured நாடு ‘1வது மலேசிய அதிகாரி நஜிப் தான்’ – போட்டுடைத்தார் ரஹ்மான் டாலான்!

‘1வது மலேசிய அதிகாரி நஜிப் தான்’ – போட்டுடைத்தார் ரஹ்மான் டாலான்!

831
0
SHARE
Ad

Datuk-Abdul-Rahman-Dahlan-565x376கோலாலம்பூர் – அமெரிக்க நீதித்துறையின் (டிஓஜே) 1எம்டிபி வழக்கில், முதல் மலேசிய அதிகாரி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தான் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.

‘யார் அந்த முதல் மலேசிய அதிகாரி?’ என்ற தலைப்பிலான பிபிசி செய்தி நிறுவனத்தின் கட்டுரை ஒன்றில், “நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அந்த ஆவணங்களை நீங்கள் படித்தீர்கள் என்றால், அது பிரதமர் தான்” என்று அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அந்த ஆவணங்களில் நஜிப்பின் பெயர் குறிப்பிடப்படாமல் முதலாம் மலேசிய அதிகாரி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் நஜிப் இந்த விசாரணையில் இல்லை என்பதால் தான் என்றும் அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆனால் நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். டிஓஜே ஏன் அவரின் பெயரை நேரடியாகச் சொல்லவில்லை? அது ஏனென்றால், அவர் இந்த விசாரணையில் சம்பந்தப்படவில்லை. அதில் மற்றவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை டிஓஜே நீதிமன்றத்தில் நிறுத்தும். பின் நீதிமன்றம் முடிவுசெய்யும்” என்று அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.