Home Featured நாடு தொகுதிகளில் சமமற்ற நிலை – தேர்தல் ஆணையம் மீது பெர்சே குற்றச்சாட்டு!

தொகுதிகளில் சமமற்ற நிலை – தேர்தல் ஆணையம் மீது பெர்சே குற்றச்சாட்டு!

670
0
SHARE
Ad

Mariaகோலாலம்பூர் – நாடெங்கிலும் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு, கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்திற்கு இழுக்க முடிவெடுத்துள்ளது பெர்சே.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, கூட்டரசு அரசியலமைப்பிற்கு எதிராக, வாக்காளர்களுக்கு நியாயமில்லாத வகையில், ஒழுங்கற்ற தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்சே அமைப்பைச் சேர்ந்த வோங் சின் ஹுவாட் கூறுகையில், பெரிய மற்றும் சிறிய தொகுதிகளுக்கிடையே, சமமற்ற நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice