Home Featured நாடு சைட் இப்ராகிம் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம்!

சைட் இப்ராகிம் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம்!

611
0
SHARE
Ad

Zaid Ibrahim 440 x 215

கோலாலம்பூர் – முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கும், அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கும் எதிராகக் கூறியுள்ள சில கருத்துகள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் உத்தரவிட்டுள்ளார்.

zaid-comment-twitter-crooked-pm

#TamilSchoolmychoice

“நீங்கள் கோணல் பிரதமராக இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு கோணல் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை நியமிப்பதுதான்” என்ற பொருள்படும்படி அவர் டுவிட்டரில் செய்திருந்த பதிவு அவரைத் தற்போது சிக்கலில் மாட்டி விட்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, சைட் இப்ராகிமின் டுவிட்டர் பதிவு தேச நிந்தனை கொண்டதாகவும், குழப்பமானதாகவும் இருப்பதால் அவர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காலிட் தெரிவித்துள்ளார்.

zaid-ibrahim-igp-twitter

காரணம் இல்லாமல் காவல் துறையினர் விசாரிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களின் விசாரணைக்குத் தான் தயாராக இருப்பதாக சைட் இப்ராகிம் பதில் கூறியுள்ளார்.