கோலாலம்பூர் – சிவப்புச் சட்டைப் பேரணியில் தங்களது கட்சி உறுப்பினர்கள் யாராவது பங்கேற்றால் அதனைத் தடுக்க அம்னோவுக்கு உரிமை இல்லை என அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அது போன்ற பேரணியில் பங்கேற்பது கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டப்படி தங்களது உரிமையை வெளிப்படுத்த அனைத்து மலேசியக் குடிமகன்களுக்கும் உரிமை உண்டு என்றும் அனுவார் தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ள பெர்சே 5 பேரணிக்கு எதிராக கோலாலம்பூரில் 3 லட்சம் சிவப்புச் சட்டை அணியினர் பேரணி நடத்துவார்கள் என அதன் தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.