Home அரசியல் 305 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனை படைத்தது சிலாங்கூர் அரசு

305 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனை படைத்தது சிலாங்கூர் அரசு

615
0
SHARE
Ad

khalidஈஜோக், மார்ச்.21- ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக கிடந்த, ஈஜோக் தொகுதியில் உள்ள கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் ஸ்ரீ செந்தோசா, கம்போங் ஜாவா சிலாங்கூர் ஆகிய  கம்பங்களைச் சேர்ந்த சுமார் 305 இந்தியர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு நிலப்பட்டா உறுதிக் கடிதம் 5ஏ பாரத்தை வழங்கியது.

நேற்று முந்தினம்  இந்த 5ஏ பாரங்களை மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் ஈஜோக் ஹர்மோனி மண்டபத்தில்  எடுத்து  வழங்கினார்.

பல பிரச்சனைகளும் பல போராட்டங்களும் இடையில் வாழ்ந்த மக்களுக்கு சிலாங்கூர் மாநில அரசரால் விடிவு காலம் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும் விவசாய நிலங்களை வீட்டு  மனையாக்கி இன்று மக்களை நிலச்சொந்தக்கார்களாக்கி சிலாங்கூர் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துள்ளது மாநில அரசு.

“பல ஆண்டுகளாகக்  குடியிருந்த மக்களுக்கு நிலத்தை வழங்குவதில் எந்த தவறும் இல்லை. ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தால் அந்த நிலம் அவருக்கே சொந்தம் என்ற கோட்பாட்டில் நிலம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலமானது ஒரு குடும்பத்திற்கு ஒரு நிலம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நிலம் கிடைக்காதவர்களுக்கு ஆய்வுகளுக்குப் பிறகு நிலம் வழங்கப்படும்” என்று டான்ஸ்ரீ காலிட் உறுதியளித்தார்.