புதுடில்லி – இந்தியாவுக்கான 2017-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி, இன்று காலை இந்திய நேரப்படி 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அருண் ஜெட்லி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திட்டமிட்டபடி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் என்பது நாட்டின் அரசியல் சாசன அமைப்பின்படி சமர்ப்பிக்கப்பட வேண்டியது என்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து, வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பிக்க அனுமதிப்பேன் என்றும் சுமித்ரா மகாஜன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.