Home Featured உலகம் இலண்டன் தாக்குதல்: 5 பேர் மரணம் – 40 பேர் காயம்!

இலண்டன் தாக்குதல்: 5 பேர் மரணம் – 40 பேர் காயம்!

681
0
SHARE
Ad

Britain-parliamentஇலண்டன் – பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் முழுவிவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 5 பேர் மரணமடைந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.

மற்ற அண்மைய விவரங்கள் வருமாறு:

  • மரணமடைந்த ஐவரில் ஒருவர் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட காவல் துறை அதிகாரியாவார். அந்த அதிகாரியைத் தாக்கிய தாக்குதல்காரன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
  • பொதுமக்களில் மூவர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
  • காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் சில பிரான்ஸ் நாட்டு சுற்றுப் பயணிகளும், தென் கொரிய நாட்டு மாணவர்களும் அடங்குவர்.