Home Featured நாடு வான் அசிசா மருத்துவமனையில் அனுமதி!

வான் அசிசா மருத்துவமனையில் அனுமதி!

989
0
SHARE
Ad

Wan Azizah Bin Wan Ismailகோலாலம்பூர் – பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நேற்று திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, வான் அசிசா நலமாக இருப்பதாக, அவரின் பத்திரிக்கை செயலாளர் ரோட்சியா இஸ்மாயில் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“மருத்துவர்களின் ஆலோசனைப் படி, அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அது அவருக்குப் போதுமானத் தனிமையைக் கொடுப்பதோடு, குணமடையவும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும் வைக்கிறது. எனவே டாக்டர் வான் அசிசா விரைவில் குணமடைந்து, பணிக்குத் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள்” என்று ரோட்சியா இஸ்மாயில் கூறியிருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை துவங்கிய நாடாளுமன்றம் மற்றும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் வான் அசிசா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.