Home Featured நாடு 1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் யார்? – ரபிசி வெளியிடுகிறார்!

1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் யார்? – ரபிசி வெளியிடுகிறார்!

934
0
SHARE
Ad

Rafiziகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, 1 எம்டிபி நிறுவனத்திலிருந்து நிதி பெற்ற முன்னாள் பாஸ் கட்சித் தலைவர் ஒருவரின் பெயரை வெளியிடப் போவதாக பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி அறிவித்திருக்கிறார்.

இது குறித்து ரபிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின், விசாரணைக்குட்படுத்தப்பட்ட தனிப்பட்ட வங்கிக் கணக்கின் மூலமாக, 1எம்டிபி நிதி பெற்ற முன்னாள் பாஸ் தலைவரின் பெயரை 1 மணியளவில் வெளியிடுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த முன்னாள் பாஸ் தலைவர் குறித்து நாளை வெள்ளிக்கிழமை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடமும் புகார் அளிக்கவிருப்பதாக ரபிசி குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice