Home Featured உலகம் சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!

சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!

1058
0
SHARE
Ad

Trumppudinமாஸ்கோ – சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.

சிரியாவில் நடைபெற்று வரும் போரில், மாஸ்கோ பஷார் அல் அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றது. அதேவேளையில் அமெரிக்கா, பஷார் அல் ஆசாத்தின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்து வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.