Home Featured நாடு பரபரப்பான சூழலில் பிகேஆர் மாநாடு

பரபரப்பான சூழலில் பிகேஆர் மாநாடு

853
0
SHARE
Ad

PKRCongressஷா ஆலாம் – இன்று சனிக்கிழமை தொடங்கும் பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சியின் ஆண்டு மாநாடு பரபரப்பான, நெருக்கடியான அரசியல் சூழலில் நடைபெறுகிறது.

நேற்று இளைஞர், மகளிர் பிரிவுகளுக்கான மாநாடுகளை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தொடக்கி வைத்த நிலையில், இன்று காலை மாநாட்டை கட்சியின் தேசியத் தலைவர் வான் அசிசா தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சியின் மிரட்டல்களைக் கண்டு அவர்களுக்குப் பயந்து கொண்டு இருக்க மாட்டோம் என அஸ்மின் அலி தீர்க்கமான முடிவை அறிவித்திருக்கும் நிலையில், மாநாடு முடிவுறும்போது, பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில பங்கேற்பு குறித்த தீர்மானம் ஒன்றை பிகேஆர் மாநாடு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எந்த ஓர் அரசியல் கட்சியும் எங்களை மிரட்டிப் பிணையாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அஸ்மின் முழங்கியுள்ளார்.