வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடனான தனது முதல் சந்திப்பை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.
அவருக்கு திரளான அமெரிக்க இந்தியர்கள் கூடி வரவேற்பு நல்கினர்.
தனது இரண்டு நாள் வருகையின்போது, டிரம்புடன் பல்வேறு அம்சங்கள் குறித்து மோடி பேச்சு வார்த்தைகள் நடத்தவிருக்கிறார்.
அமெரிக்க இந்தியர்களுடனான சந்திப்பு ஒன்றையும் அவர் வாஷிங்டனில் நடத்துவார்.
மோடிக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் விருந்துபசரிப்பு ஒன்றை வழங்குவார். வெள்ளை மாளிகையில் வெகு அபூர்வமாக ஒரு சில தலைவர்களுக்கு மட்டுமே பாரம்பரியமாக அமெரிக்க அதிபர் விருந்துபசரிப்பு வழங்குவார்.
மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கும் அமெரிக்க இந்தியர்கள்…