Home நாடு “88-ஏ சேர்க்கப்பட தொடர்ந்து போராடுவோம்” – லியாவ் உறுதி

“88-ஏ சேர்க்கப்பட தொடர்ந்து போராடுவோம்” – லியாவ் உறுதி

1138
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர் – ஒரு தலைப்பட்ச மதமாற்றம் தொடர்பிலான திருமண, மணவிலக்கு சட்டத் திருத்தங்களில் விட்டுக் கொடுத்து விட்டோம், வழிமாறி விட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தொடர்ந்து இதற்கான போராட்டங்கள் தொடரும் என்றும் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் உறுதியளித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இதே பிரச்சனை குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து லியாவ்வும் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய, உணர்ச்சிகரமான இந்த விவகாரம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர் “தம்பதியரில் ஒருவர் மதம் மாறுவதால் ஏற்படக்கூடிய மணவிலக்கு தொடர்பான சிக்கல்களுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும். 88-ஏ சட்டத் திருத்தம் சேர்க்கப்படாததால் அரசாங்கம் இதில் பின்வாங்கி விட்டது என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இந்த விவகாரம் ஒரு தலைப்பட்ச மதமாற்றம் குறித்தது மட்டுமல்ல. மணவிலக்கு தொடர்பான சிக்கல்களும் அடங்கியது” எனவும் லியாவ் தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

“88-ஏ சட்டத் திருத்த விதி நாட்டின் அரசியல் சாசனத்தையும் தொடர்புப் படுத்துவதால், அதை இனி கவனிப்போம். தொடர்ந்து ஒருதலைப் பட்ச மதமாற்றத்திற்கும் தீர்வு காண்போம்”

இந்த விவகாரத்தில் உள்ளடங்கியிருந்த இரு பெரும் சிக்கல்களில் ஒன்றுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம், மற்றொன்றுக்கு இனி தீர்வு காணப் போராடுவோம் என்றும் லியாவ் கூறியிருக்கிறார்.