Home நாடு செப்டம்பர் 4 பொதுவிடுமுறை – நஜிப் அறிவிப்பு!

செப்டம்பர் 4 பொதுவிடுமுறை – நஜிப் அறிவிப்பு!

1168
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – 29-வது சீ விளையாட்டுப் போட்டியில், மலேசியாவின் மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாடும் விதமாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி, திங்கட்கிழமை, நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நேற்று புதன்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார்.

“மலேசியாவில் ஏற்கனவே நிறைய பொதுவிடுமுறைகள் உள்ளன. ஆனால், நமது விளையாட்டாளர்களின் ஆதரவும், சிறப்பான பங்களிப்பும் காரணமாக அரசாங்கம் செப்டம்பர் 4-ம் தேதி பொதுவிடுமுறையை அறிவிக்கிறது” என்று கூட்டத்தினரின் கைதட்டல்களுக்கு மத்தியில் நஜிப் அறிவித்தார்.

#TamilSchoolmychoice