Home நாடு சமயப் பள்ளி தீவிபத்து – 11 முதல் 18 வயது 7 சிறுவர்கள் கைது!

சமயப் பள்ளி தீவிபத்து – 11 முதல் 18 வயது 7 சிறுவர்கள் கைது!

922
0
SHARE
Ad

malaysian police-logoகோலாலம்பூர் – இங்கு கம்போங் டத்தோ கிராமட்டிலுள்ள இஸ்லாமியப் பள்ளியில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தை வன்மமான குறும்புச் செயலாகவும் (mischief), கொலை வழக்காகவும் வகைப்படுத்தியுள்ள காவல் துறையினர், இதுவரையில் 7 பேரைக் கைது செய்துள்ளனர்.

11 முதல் 18 வரையிலான வயதுடைய இவர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர்.

கைது செய்யப்பட்ட எழுவரில் அறுவர் போதைப் பொருள் பழக்கம் கொண்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அமார் சிங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அமார் சிங் மேலும் தெரிவித்தார்.