Home நாடு மஇகா சட்டவிதித் திருத்தங்களுக்கு நஜிப் பாராட்டு!

மஇகா சட்டவிதித் திருத்தங்களுக்கு நஜிப் பாராட்டு!

700
0
SHARE
Ad

MIC71(g)கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகாவின் 71-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மஇகா கொண்டு வந்திருக்கும் சட்டவிதித் திருத்தங்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

“இனி 42,000 அடிமட்ட மஇகாவினர் கூடி மஇகா தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுடுப்பார்கள் என்ற சட்டத் திருத்தத்திற்கு நான் பாராட்டு கூறுகிறேன். காரணம், அடிமட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்ந்தெடுக்கும்போதுதான் கட்சி வலுவாக இருக்கும். அதனால்தான் அம்னோவிலும் இதேபோன்று நான் 60 ஆயிரம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்” என்றும் நஜிப் சுட்டிக் காட்டினார்.