Home Video “குமாரியின் 5 தோழிகள்” – உணர்ச்சிகரமான செல்கோம் தீபாவளி குறும்படம்

“குமாரியின் 5 தோழிகள்” – உணர்ச்சிகரமான செல்கோம் தீபாவளி குறும்படம்

1402
0
SHARE
Ad

celcom-logoகோலாலம்பூர் – ஏதோ சில காரணங்களுக்காக தாய் தந்தையரைப் பிரிந்து வாழும் குமாரி என்ற இளம் பள்ளி மாணவி. தீபாவளிப் பெருநாளுக்காவது வருவார்கள் என பெற்றோரை எதிர்பார்த்து ஆவலுடன் அவள் காத்திருக்க, இந்தத் தீபாவளிக்கும் எங்களால் வர முடியாது என அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வருகிறது.

அதைக் கண்டதும் மனம் ஒடிந்து போகும் குமாரியை – சோகம் சூழும் அவரது தீபாவளியை – அவரது மற்ற இனத் தோழிகள் இணைந்து, அவர்களும் சேலையைக் கட்டிக் கொண்டு, பலகாரங்கள் செய்து கொடுத்து – குமாரியின் தீபாவளியை எப்படி குதூகலமாக்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது செல்கோம் தொலைத் தொடர்பு நிறுவனம் (CELCOM) தீபாவளிக்கென பிரத்தியேகமாகத் தயாரித்து வெளியிட்டிருக்கும் “குமாரியின் 5 தோழிகள்’ என்ற குறும்படம்.

இன உறவுகளையும், பள்ளிகளில் பல இன மாணவ, மாணவியரிடையே நிலவும் இன, மத நல்லிணக்கம், போன்ற அம்சங்களையும் சுமார் 5 நிமிடங்களில் அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கிறது செல்கோம் நிறுவனத்தின் இந்தக் குறும்படம்.

#TamilSchoolmychoice

இதன் சுருக்கம் தொலைக்காட்சி விளம்பரமாகவும் ஒளியேறி வருகிறது.

அந்தக் குறும்படத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-

SideBanner-Astro